உலகின் முதல் மற்றும் ஒரே ரோபோட்டிக் முறையிலான லேசர் அறுவை சிகிச்சையான ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ என்பதனை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.
சிறிய கீறலின் மூலம் வண்ணப்படல வில்லையை அகற்றும் இந்த மிகத் துல்லியமான, மிகக் குறைவான ஊடுருவல் கொண்ட மருத்துவ செயல்முறையானது, 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திற்குள் மயோப்பியா எனப்படும் கிட்டப்பார்வையை சரி செய்கிறது.
இந்நிலையில், சென்னை மாநகரில் ரீலெக்ஸ் ஸ்மைல் செயல் முறையை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனையின் பிரபல இதயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தீரஜ் ரெட்டி, இதன் தொடக்க விழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குனரும், தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர். அஸ்வின் அகர்வால், மருத்துவ சேவைகளுக்கான மண்டலத் தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மண்டலத் தலைவரும், முதுநிலை ஒளிவிலகல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். ரம்யா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.



