கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் முனைவர் வெ.இறையன்பு (முன்னாள் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு) கலந்து கொண்டு தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
முனைவர் அன்பரசி (இணைப் பேராசிரியர், வேதியியல் துறை) வரவேற்புரை வழங்கினார். அருட்சகோதரி இமல்டா மேரி (தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் இணைப்பேராசிரியர் வரலாற்றுத்துறை) வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர் இறை யன்பு பேசுகையில், தலைமை தோன்றும் விதம், தாய்வழிச் சமூகம் தந்தைவழி சமூகமாக மாறியது. இன்று இருக்கக்கூடிய மானுடசமூகம் உருவான வர லாறு, பெண்ணின் பெருமை – சேகரித்தல், பொறுமைக்குணம், விவசாயத்தையும் கால்நடைப் பராமரிப்பையும் பெண்கள் ஆண்களுக்குக் கற்றுக்கொடுத்தமை, 14 வகையான காட்டு விலங்குகளை வளர்ப்பு மிருகமாக மாற்றியமை, தலைமைப்பண்புக்கு எடுத்துக்க £ட்டாகத் திகழ்ந்த மார்டின் லூதர் கிங் ஆகியனவற்றை எடுத்துரைத் தார்.
ஜனநாயக முறைப்படி இருப்பது தான் சிறந்த தலைமைப் பண்பு என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார். முனைவர் கலைவாணி (உதவிப்பேராசிரியர், வேதியியல் துறை) நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் ரெஜினா, நூலகத்துறைத்தலைவர் அருட்சகோதரி முனைவர் ஜாக்குலின் மேரி, மாணவியர் புல முதன்மையர் டாக்டர் மல்லிகா, கல்விசார் புலமுதன்மையர் பொலன்சியா , தேசிய மீள்தர நிர்ணய மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலின் வசந்தி, பேராசிரியர்கள், 900க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.