Homeபிற செய்திகள்தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் குவிந்த 547 மனுக்கள்

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் குவிந்த 547 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டத்தில் மாற் றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் பார்வையற்ற 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10,293/- மதிப்பில் மொத்தம் ரூ.30,879/- மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாக்கிக் காட்டும் உருப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து தென்காசி வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுய உதவிக்குழுவினரின் பன்முக கலாச்சாரப் போட்டிகளான கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி, குழுப் பாடல், குழு நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு சான்றிகழ்களை வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 547மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம் பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர்
அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குருவம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img