இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கியதையடுத்து கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 603 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,835 மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.49.23 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜீதேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



