அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் அவர்களின் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கங்களை கிராம மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பொட்டையாண்டி புரம்பில் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாமினை நடத்தினர். இதில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டி விற்பது, சந்தைப்படுத்துவது குறித்து மாணவர்கள் விளக்கினர்.
பின்பு விவசாயிகளுக்கு தேவையான இணைய விரிவாக்க சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அளித்தனர். வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வானது அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டது.