சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கண் அழுத்த நோய்க்காக (கிளாகோமா) சொட்டு மருந்து பயன்படுத்துவதிலிருந்து விடுதலை அளிக்கும் குறைந்த ஊடுருவல் உள்ள அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண் அழுத்த நோய்க்காக 10 ஆண்டுகளாக தினசரி சொட்டு மருந்தை பயன்படுத்தி வந்த 63 வயதான ஒரு நோயாளிக்கு அதிலிருந்து விடுதலை அளித்திருக்கிறது.
மருத்துவமனையின் திறன்மிக்க அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட 10 நிமிட எம்.ஐ.ஜி.எஸ். அறுவை சிகிச்சை, கண்ணுக்குள் இருந்த அழுத்தத்தை கணிசமான அளவு குறைத்திருக்கிறது.
கண்ணுக்குள் நீர்மங்கள் உட்பாய்வு அதிகரிக்கும்போது அல்லது வெளிப்பாய்வு குறையும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில் இது நிகழ்கிறது.
அதிகரித்த அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்துகிறது.
கண்ணின் திரவ வெளியேற்ற அமைப்பை மேம்படுத்துவதற்கு மிகச் சிறிய ஸ்டண்ட்களை பதியம் செய்வது போன்ற பல உத்திகளைப் பயன்படுத்தி திரவ வெளிப்பாய்வை அதிகரிப்பதன் மூலம் கண்ணின் உள்ளார்ந்த அழுத்தத்தை எம்.ஐ. ஜி.எஸ்.–ஆல் குறைக்க முடியும்.
இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் செயலாக்க இயக்குநரும், தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், ‘’மிகக் குறைந்த அளவிலான நுண் ஊடுருவல் மற்றும் தையல் போடும் அவசியமின்மை எம்.ஐ.ஜி.எஸ்.சிகிச்சையின் சிறப்பம்சங்களாகும். இந்த சிகிச்சைக்குப் பிறகு நோயாளி வேகமாக குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்“ என்றார்.



