fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மலபார் கோல்டு - டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைககளின் கண்காட்சி, விற்பனை

திருப்பூர் மலபார் கோல்டு – டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைககளின் கண்காட்சி, விற்பனை

திருப்பூர் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, விற்பனை நடைபெற்று வருகிறது.

தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆபரணமும் கலைஞர்களின் நிபுணத்துவத்தையும், தனி திறன்களையும் பிரதிபலிக்கிறது.

அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் நகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை டாக்டர் அபிநயா ஜெகதீஷ், செல்வராஜ் குடும்பத்தினர், வேலுசாமி உமாமகேஸ்வரி குடும்பத்தினர், ஆஷிக் ரசூல் குடும்பத்தினர், மோகன் குடும்பத்தினர், லதா குடும்பத்தினர், ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், திருப்பூர் கிளை தலைவர் ராகுல், திருப்பூர் கிளை துணைத் தலைவர் நோயல், துணை வர்த்தக மேலாளர் அருள் பிரகாஷ் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 12 நாடுகளில் 335-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை வாடிக்கையாளர்களுக்கு மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img