fbpx
Homeபிற செய்திகள்தேசிய தாங்டா போட்டியில் கோவை மாணவிகள் அசத்தல்

தேசிய தாங்டா போட்டியில் கோவை மாணவிகள் அசத்தல்

67 வது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் டெல்லியில் உள்ள தியாகராஜ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் ஜனவரி மாதம் 11 முதல் 16 வரை நடைபெற்றது.

இதில் தாங்டா விளையாட்டுக்காக தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு மேரி பிரியதர்ஷினி (கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.

சிவாணி (கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளி) 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நேத்ரா ஸ்ரீ (VCV சிசு வித்யாலயா பள்ளி) 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img