கோவை ரேஸ் கோர்ஸ் தாஜ் விவாண்டா ஹோட்டலில் ஆசிய நகை கண்காட்சி விற்பனை தொடக்க விழா இன்று (19ஆம் தேதி) நடைபெற்றது
இந்த நகை கண்காட்சியை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனருமான வி.வாசுகி குத்து விளக்கு ஏற்றிதொடங்கி வைத்தார். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் இயக்குனர் முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த கண்காட்சி வருகிற 21 ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் நடக்கிறது. நகை கண்காட்சி விற்பனை தினசரி காலை 10:30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கிறது. மேலும் வாடிக்கையாளரின் வசதிக்காக கார் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நகை கண்காட்சியில் வைர நகைகள், தங்க நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இந்த கண்காட்சியில் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற வரா ஸ்ரீ ஜுவல் லர்ஸ், டெல்லி சீகல் ஜுவல்லர்ஸ், மும்பை நாகா கிரியேஷன்ஸ் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு உள்ளன.



