தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், கனமழை மற்றும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள். தங்களது தொழிலை மீண்டும் நிறுவவும். புதிதாக தொழில் தொடங்கவும் அரசு மானியத்து டன் கூடிய சிறப்பு வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் ஏரல் வட்டாட்சி யர் அலுவலகத்திலும் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நி லைப்பள்ளி வளாகத்திலும் நடந்தது.
முகாமில் அனைத்து வங்கிகளும், மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கான சிறப்பு கடனுதவி திட்டங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்துடன் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு றுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடைவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு வழிகாட்டு முகாமில் ஏராளமான வணிகர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுடையோர் கலந்து கொண்டனர்.
ஏரலில் நடந்த முகாமில் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன் பெறுவதற்காக ரூ.12.07 கோடி திட்ட மதிப்பிலான 249 விண்ணப்பங்களும், தாட்கோ மூலம் ரூ.13 லட்சம் திட்ட மதிப்பிலான 7 விண்ணப்பங்களும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக ரூ.21 லட்சம் திட்ட மதிப்பிலான 9 விண்ணப்பங்களும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக ரூ. 36.35 லட்சம் திட்ட மதிப்பிலான 21 விண்ணப்பங்களும் என மொத்தம் ரூ.12.77 கோடி திட்ட மதிப்பிலான 286 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடியில் நடந்த முகாமில் மாவட்ட தொழில் மையம் மூலமாக ரூ.18.45 கோடி மதிப்பிலான 401 விண்ணப்பங்களும், தாட்கோ மூலம் ரூ.20 லட்சம் மதிப்பிலான 15 விண்ணப்பங்களும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.56 லட்சம் மதிப்பிலான 24 விண்ணப்பங்களும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.10.5 கோடி மதிப்பிலான 35 விண்ணப்பங்களும் என மொத்தம் ரூ.20.26 கோடி மதிப்பிலான 475 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு முகாம்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.33 கோடி மதிப்பிலான கடன் கேட்டு 761 வணிகர்கள் விண்ணப்பங்களை அளித்தனர்.
“இந்த விண்ணப்பங்கள் பரிசீ லிக்கப்பட்டு தொடர்புடைய வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அ.சொர்ணலதா தெரிவித்தார்.



