கரூர் மாவட்டம், காக்காவாடி பகுதியில் செயல்படும் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான, முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் பயின்று வரும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட 11ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ- மாணவியர் சுமார் 1300- பேர் பங்கேற்ற 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், வாலிபால், த்ரோபால், கொக்கோ, கிரிக்கெட், பேஸ்கட்பால் என பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர், பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் மாணாக்கர்களின் பெற் றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.