fbpx
Homeபிற செய்திகள்பெண்கள் ஆன்மீக கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

பெண்கள் ஆன்மீக கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

சமுதாயத்தை மேன்மைப்படுத்த பெண்கள் ஆன்மீகத்தோடு கலந்து கலாச்சாரத்தை முன் னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மேட் டுப்பாளையம் அருகே நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிப்பாளையம் பகுதியில் எல்லை
கருப்பராயன் கோவிலில் தேன்கூடு அறக்கட்டளை சார்பில் அறநெறி போற்று வோம், திருக்குறள் போற்றும் பெண்ணியம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகா தேவன் பங்கேற்று பெண்ணியம் குறித்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது: திருக்குறள் என்பது வாழ்வியல் முறையின் தத்துவம் எந்தெந்த விதங்களில் எல்லாம் பெண்கள் தங்களது பாதையில் இருந்து விலக கூடாது என எடுத்துச் சொல்லியுள்ள திருக்குறள் பெண்களை எல்லாவற்றிலும் மேன்மைப்படுத்தும் பொக்கிஷம் எனவே இந்த சமுதாயத்தை மேன்மைபடுத்தும் கடமைகள் பெண்களுக்கு உள்ளது. அதனை அவர்கள் ஆன் மீகம் கலந்து எடுத்து செல்லும் போது நமது கலாச்சாரம் மேன்மை மிக்கதாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img