fbpx
Homeபிற செய்திகள்பொற்சபை அகாடமியின் 10ம் ஆண்டு விழா

பொற்சபை அகாடமியின் 10ம் ஆண்டு விழா

கோவை “பொற்சபை அகாடமி பர்பாமிங் ஆர்ட்ஸ்”-ன் பத்தாம் ஆண்டு விழா சித்ரா கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு குரு நந்தனி செல்வராஜ் முன்னிலை வகித்தார். சாந்தி ஆசிரம நிறுவனர் டாக்டர் கெஸ்வினோ அரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுழற்சிங்க ராகவேந்திரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில், மோகன கல்யாண் வீணை வாசிப்பு, குழந்தைகளின் பக்தி பாடல்கள், இளம் தளிர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மதுராஷ்டகம், காவடி சிந்து, புஷ்பாஞ்சலி, கீர்த்தனைகள், கவுத்துவம், கணேஷ் பஜனை, அலாரிப்பு, சிவன் மற்றும் மயூர அலாரிப்பு, அனுமன் சாலிசா ஆகியவற்றை மிகவும் அழகாக நடனத்தில் லயிக்க வைத்தனர்.

வர்ணத்தில் சிவபுராணக் கதையை சிறப்பாக காட்சி படைத்தனர். கண்ணப்ப நாயனார், மார்க்கண்டேயன், மன்மத தகனம் ஆகிய கதைகளை பக்தி சிறப்போடு கலை நிகழ்ச்சியாக நடத்தினர். முடிவில் மேற்கத்திய இசையில் பரத நடனத்தை புகுத்தி, பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img