fbpx
Homeபிற செய்திகள்கோவையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா

கோவையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா

தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் சர்ச், நாகை வேளாங்கண்ணி உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண் டாடி வருகின்றனர். சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, பிரார்த் தனைகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள் ளிட்ட நாடுகளில் டிசம்பர் தொடக்கம் முதலே கிறிஸ்துமஸ் விழாகளை கட்டிவிடும். இந்நிலையில் தான் 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உள் பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸிஸ் தலை மையில் இன்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந் தது. புனித பீட்டர் பேராலயத்தில் குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து போப்பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி வழங்கினார். உலகம் அமை தியாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்யப் பட்டது. மேலும் தமிழகத்தி லும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.
சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்பட தமிழகத்தின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங் கேற்றுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். இங்குள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதுதவிர கோவை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு முதல் கிறிஸ் துமஸ் பண்டிகை கொண் டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி சர்ச்சகள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்கள் ஒளிர செய்யப்பட்டு தோரணங் கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில் கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் நள்ளி ரவு ஜெபத்துக்கு முன்ன தாக பல சர்ச்சுகளில் குழந் தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கோவையில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பாடல்களுடன் விழா துவங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், போத்த னூர் புனித ஜோசப் தேவாலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், கோவைப் புதூர் குழந்தை ஏசு தேவாலயம், ராமநாத புரம் ஹோலி டிரினிட்டி தேவாலயம், காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், சவுரிபாளையம் இம்மானுவேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக ரத்தினபுரி பகுதியில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் குழந்தை இயேசு உருவபொம்மை அனைவரிடமும் தூக்கி காட்டி குழந்தை ஏசு பிறப்பை அறிவித்தார். பின்னர் குடிலில் வைத்து ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் நடத்தினார்.

முன்னதாக பேட் டியளித்த மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவி னாஸ் கூறியதாவது, ஆண்டவர் மனித அவதாரம் எடுத்தநாள் இன்று எனவும், நாட்டில் சமா தானம், அமைதி நிலவ வேண்டும், போராட்டங்கள் போர் போன்றவை ஒழிய வேண்டும் எனவும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சமாதானம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என இந்த சிறப்பு திருப்பலியில் வேண்டுதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவாக முன்னெடுக்கப்பட்டது. இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிறமதத்தினரும் கலந்து கொண்டு கிறுஸ்துவமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பல்சமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவர் முகமது ரவி ஏற்பாடு செய்திருந்தார். அனைவரையும் கிறிஸ்துவ மக்கள் பூக்கள் கொடுத்து அன்புடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் கிறிஸ்துமஸ் சிறப்பு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img