நாட்டின் குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலை நகர் புதுடெல்லியில், பிரமாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளது.
இதற்காக முப்படையினர், காவல் துறையினர், தேசிய மாணவர் படை யினர், நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதியியல் இரண்டாமாண்டு மாணவி என்.வி. பவ்யா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவி என்.வி. பவ் யாவை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி வாழ்த்தினார். இதே போல் ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகி யோரும் பாராட்டினர்.
டெல்லியில் நடைபெ றும் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 9-ஆவது முறையாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.