கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, அறிவுசார் அமைப்பின் (IPR CELL) சார்பாக ‘கலை மற்றும் அறிவியல் கண்காட்சி 2023’ நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி. முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி. முனைவர் மேரிபபியோலா ஆகியோர் ஆலோசனைக் குழுத் தலைவர்களாக இருந்து நடத்தினர்.
இக்கண்காட்சிக்கு நிர்மலா மகளிர் கல்லூரி, வேதியியல் துறை இணைப்பேராசிரியரும் அறிவுசார் அமைப்பின் அமைப்பாளருமான முனைவர் க.அன்பரசி நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
இக்காண்காட்சிக்கு கோவை வனச்சூழலியல் மற்றும் காலநிலை மாற்றம் பிரிவின் (FECC), IFGTB, விஞ்ஞானி டாக்டர். கே.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தி னராக தலைமை வகித்தார்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் ஓ.எம். சரவணகுமார், பி.எஸ்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவி யல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் எஸ்.சங்கீதா மற்றும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவ னம், உயிர் வேதியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் துறையின் உதவிப்பேராசிரியர் டாக்டர். கே.வி.ஷாலினி ஆகியோர் நடுவர் களாக செயல்பட்டனர்.
இக்கண்காட்சியானது மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின்ஆய்வு அனுபவங்களை வெளிப்படுத்தவும், பிரச்சனைகளைத் தீர்க்கும் அணுகுமுறையை கண்டுபிடிக்கும் வகையிலும் மாணவர்கள் தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கண்காட்சியில் மின்னணு மாதிரிகள், அட்டைப்படங்கள், பாடம் தொடர்பான விளக்கப் படங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. மாணவிகள் பொருத்தமான முறையில் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாதிரிகளை வடிவமைத்திருந்தனர்.
மேலும் விவசாயம் மற்றும் கரிம வேளாண்மை, மாசுக்கட்டுப்பாடு, செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் சென்சார் அடிப்படையிலான சாதனங்கள், கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான மாதிரிகள், வரலாற்று நிகழ்வுகள் குறித்த மாதிரிகள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் குறித்த விளக்கப்படங்கள் மின் வணிகவியல் தொடர்பான சாதனங்கள் என பல்வேறு கருப்பொ ருள்களின் அடிப்படையில் மொத்தம் 161 மாதிரிகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன
இந்த நிகழ்வானது மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் திறமைகளுக்கும் ஆர்வத்திற்கும் செயல்பாட்டிற்கும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு ஓர் அரிய மேடையாக அமைந்திருந்தது. இக்கண்காட்சி ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியாக சிறந்த மாதிரிகளை வடிவமைத்திருந்த மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.



