கரூர், பசுபதிபாளையத்தில் தனியார் கூட்டரங்கில் ஏஐசிசிடியு இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன், அகில இந்திய தலைவர் சங்கர், அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜீவ், மாநில பொதுச் செயலாளர் ஞானதேசிகன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஹெச்எம்எஸ் அமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணி உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், தொழிலாளர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



