fbpx
Homeபிற செய்திகள்மண் சரிவால் சேதமடைந்த மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

மண் சரிவால் சேதமடைந்த மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

பருவமழை தீவிரமடைந்து கடந்த மாதம் 23ஆம் தேதி அதிகாலை கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி மலைப்பாதையில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் கோத்தகிரி மலைப் பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு குஞ்சப்பனை இடையே பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு பாதையில் பாறாங்கற்கள் உருண்டும் , மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந் தன.

சேறும் சகதியும் கலந்து பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சாலையை மூடியது.
மண் சரிவில் 2 பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால் மேட்டுப்பாளையம் &கோத்தகிரி சாலையில் போக்குவரத்து துண்டிக் கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் உதவி கோட்ட பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் 20 தனி பணி யாளர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

9 மணி நேரத்திற்கு பின்னர் சாலையை சீரமைக்கும் பணி முடிவடைந்தது அதன் பின்னர் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி செல்லும் வழியில் குஞ்சப்பனை அருகே மண் சரிவால் சேதமடைந்த மலைப் பகுதியை பார் வையிட்டார்.

சாலை யோரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப் பட்டிருந்த மண் சரிவால் சேதமடைந்த பகுதிகள் மற்றும் சீரமைக்கும் பணிகளை விளக்கும் புகைப்படங்களை பார்வையிட்டார். மண் சரிவால் சேதம் அடைந்த பகுதிகளில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் குறித்து கோட்ட பொறியாளர்கள் சுந்தர் மூர்த்தி, குழந்தைராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவருடன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் உதவி கோட்ட பொறியாளர் குமரன் உதவி பொறியாளர் பிரசன்ன குமார் கோத்தகிரி உதவி கோட்ட பொறியாளர் சங்கர்லால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். அதன் பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரிக்கு புறப்பட்டு சென்றார்.

படிக்க வேண்டும்

spot_img