fbpx
Homeபிற செய்திகள்எஸ்.ஏ.இ. இந்தியா நடத்திய சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாடு

எஸ்.ஏ.இ. இந்தியா நடத்திய சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாடு

சொசைட்டி ஆஃப் ஆட்டோ மோட்டிவ் இன்ஜினியர்ஸ் இந்தியா மற்றும் மின், மின்னணு பொறி யாளர்கள் சங்கம் இணைந்து நடத் தும் சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் 5வது மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது.

இந்தியாவின் மொபிலிட்டி இன்ஜினியரிங் வல்லுநர்களிடையே, அறிவுப் பரவல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பாக சொசைட்டி ஆஃப் ஆட்டோமோட் டிவ் இன்ஜினியர்ஸ் இந்தியா உள்ளது. மின் வாகன தொழில் துறையை சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்துகொண்டனர். இந்திய அரசாங்கத்தின் முக்கிய முன்னு ரிமைகள் மற்றும் கொள்கைத் தலையீடுகள், இந்த 3 நாள் மாநாட்டின் போதுவிவாதிக்கப்பட்டது.

மாநாட்டு தலைவர் பாலசுப் ரமணியன் பேசுகையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மாநாட்டு அமைப்பாளர் டாக்டர் ஷங்கர் வேணுகோபால் பேசுகையில், ‘eAMRIT’என்ற இலக்கை அடைவதை நோக்கி நாம் நகர்ந்து வருவதால், இ-மொபிலிட்டியை விரைவுபடுத்துவதற்கான மாநாட்டின் கருப்பொருளின் முக்கியத் துவத்தை வலியுறுத்தினார்.

SAEINDIA மூத்த துணைத் தலைவர் டாக்டர். ஜி. நாகராஜன் பேசுகையில், பொறியியல் மாணவர்களுக்காக எதிர்காலத்தில் நடத்தப்படும் நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img