சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் சென்னை அசோக் லே லண்ட் நிறுவனத்தின் ஆட்டோமோட் டிவ் தொழில்நுட்பச் சிறப்பு மையம் கல்லூரி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினர்களாக சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்புத் துறையின் தலைவர் பாலச் சந்தர் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இம்மையத்தில் அசோக் லேலண்ட் நிறுவ னத்தின் சமூக பொறுப்பு துறையின் மூலம், 50 இலட்சம் மதிப்பில் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பச் ஆய் வகம் அமைத்து தரப்பட்டுள்ளது.
இம் மையத்தின் மூலம் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பொறியியல் மற்றும் பாலிடெகனிக் மாணவர்க ளுக்கும் வாகன தொழில்நுட்பத்தில் திறன் மேம் பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். தலைமை விருந்தினர் பாலச்சந்தர், ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி பற்றி எடுத்துரைத்தார். அசோக் லேலேண்ட் துணைத் தலைவர் சசிகுமார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் மற்றும் கல்லூரி நிறுவனர் முனைவர் சீனிவாசன் பேசுகையில், கல்லூரி யில் பல முன்னணி பெருநிறுவ னங்க ளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து 20 க்கும் மேற்பட்ட நவீன ஆய்வகங்கள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதின் மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறமுடி கிறது என்றார். இந்நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் குமார்சாமி, பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் துணை முதல்வர் விசாகவேல் ,இயக்குனர்கள், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு துறையைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.