கோவை சௌரிபாளை யம் அன்னை வேளாங் கண்ணி மெட்ரிக். மேல் நிலைப் பள்ளியில் ‘பேஷன் பரேட் – 2023’ நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களை பல் துறை வல்லுநர்களாக உரு வாக்குவதில் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இப்பள்ளியில் ப்ரிகேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், 500க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் மெர்சி விக்டர் தலைமை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் வினிஜோனா, அலங்கார மேடை, மாணவர்களின் ஆடை தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்தார்.
பிரபலங்களுக்கான ஆடை வடிவமைப்பாளர்கள் ரேஷ்மா பானு, வல்சலா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டியில் சிறந்த ஆடை அலங்காரம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்களை வழங்கினர்.
சிறந்த நடையழகு, உடையழகு, கருத்துப்பகிர்வு போன்ற பிரிவுகளிலும் மாணவர் களுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன. பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ் நன்றி கூறினார்.



