கோவை நவ இந் தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கல்லூரி மொழித் துறையின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
மொழித் துறைத் தலைவர் த.விஸ்வநாதன் வரவேற்றார். விழாவில் பாரதியார் உருவப்படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாணவர் மன்றத் தலைவர் மாணவி மு.வர் ஷினி, துணைத் தலைவர் ப.நித்தேஷ் கிருஷ்ணா ஆகியோர், பாரதியாரின் பெருமைகளை நினைவு கூர்ந்து பேசினர்.
மேலும், பாரதியாரின் பாடல் களைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் பாரதி யாரின் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.தீனா, பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் மு. பாண்டிசெல்வி, மொழித் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.



