திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மனித உரிமை தின விழா நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக நல அலுவலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
இதில், சிறப்பு கல்வி மைய ஆசிரியர்கள் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச் சியை நடத்தினர். விழாவில், சேவ் இயக்குநர் அலோசியஸ் பேசுகை யில், ‘மனித உரிமைகளான வாழ்வதற்கான, வளர்ச்சிக்கான, பங்கேற்பிற்கான, பாதுகாப்பிற்கான உரிமை எல் லோருக்கும் உண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண் குழந்தை களுக்கும் இதனை உறுதி செய்வதில் எல்லோரும் முனைப்புடன் இருக்க வேண்டும்‘ என்றார்.
விழாவில் பேசிய மாவட்ட கலெக்டர் இந்நிகழ்ச்சியை அனைத் துப் பள்ளிகளிலும் நடத்துமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சேவ் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதாதேவி நன்றி கூறினார்.



