fbpx
Homeபிற செய்திகள்சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திறமை, கடின உழைப்பு, ஒழுக்கம் ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறும் என, மேட்டுக்கடை சூர்யா பொறியியல் கல்லூரியின் (எஸ்இசி) 9வது பட்டமளிப்பு விழாவில், 150க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ் உரை ஆற்றினார்.

மாணவர்களுக்கான பல்வேறு தொழில் வாய்ப்புகளை மேற்கோள் காட்டிய அவர், வெற்றிக்கான வாய்ப் புகளைப் பெறுவதற்கு அவர்களின் தகுதியை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.

INGU’s நாலட்ஜ் அகடமி மேலாண் இயக்குனர் கொட்டாரம் விஸ்வநாதன் ரமேஷ் சிறப்புரை உரையாற்றினார். கல்லூரி நிறுவனர் தலைவர் ஆண்டவர் கி. ராமசாமி, செயலாளர் கே.கலைச்செல்வன், பொருளாளர் வி.டி.கேசவன், துணைத் தலைவர் சி.இளங்கோ, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். மனோகரன், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் விரிவுரை யாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img