fbpx
Homeபிற செய்திகள்தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கூட்டுக்குழு அமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கூட்டுக்குழு அமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

பாஜக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணையமைச்சர் எல்.முரு கன் முகாம் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

இதனை மத்திய இணை யமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.
பின்னர், செய் தியாளர்களிடம் பேசிய அவர் “ நீலகிரியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேட் டுப்பாளையத்தில் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சர்வ தேச கடல் எல்லையை தாண்டி செல்லும்பொழுது இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப் படுவது வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசு உடனடியாக மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வந்துள்ளது.

இதுதொடர்பாக நிரந்தர தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.

இலங்கை அரசு பல்வேறு காரணங்களால் இந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருகிறது. உ.பி சட்டமன்றத்தேர் தலில் சமாஜ்வாடி கட்சி பிரமுகரிடம் இருந்து ரூ.200 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடமிருந்து வருமான வரித்துறையினர் பணம் பறிமுதல் செய்துள் ளனர்.

இது போன்று இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஊழலில் திளைத்து போய் உள்ளார்கள். பாஜக இதனை சுட்டி காண்பிக்கிறது. சென்னை வெள்ள நிவாரணம் தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு இதுவரை ரூ.950 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

மேலும், சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட் டுள்ளது. அந்த குழுவினர் சென்னையில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்விற்கு பின்னர் அவர்கள் அளிக் கும் அறிக்கைக்கு ஏற்ப உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் “ இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாவட்ட செயலாளர் ஜெயபால், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img