கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நியாயவிலைக்கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் அன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்திரகலா உட்பட பலர் உள்ளனர்.



