fbpx
Homeபிற செய்திகள்ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் - வீரர்கள் நினைவு நாள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் – வீரர்கள் நினைவு நாள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பாசத்திரத்தில் 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதியும் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிஷ்ட் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கங்களைப் பெற்றவருமான ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த 13 வீரர்களும் உயிரிழந்தனர்-. அவர்களின் நினைவாக ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நினைவுத் தூண் (ஸ்மிருதிகா) கட்டப்பட் டுள்ளது.

அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் (சதர்ன் கமாண்ட் ஜெனரல்) வழிகாட்டுதலின் கீழ் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், வெலிங்டனால் நினைவுத்தூண் (ஸ்மிரு திகா) கட்டப்பட்டது. இது எதிர்கால சந்ததியினருக்கு தியாகத்தை நினைவூட்டும்.

வனத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தேவையான அனுமதிகளை வழங்கி முழு
மனதுடன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்தது. நஞ்சப்பாசத்திரத்தில் உள்ள நினைவுத்தூண் கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று தக்ஷின் பாரத் ஏரியா கமாண்டிங் ஜெனரல் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் திறந்து வைத்தார்.

நாளை விபத்து நடந்த நஞ்சப்பாசத்திரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஜெனரல் பிபின் ராவத்தின் புகைப்படத்தை விபத்து நடந்த இடத்தில் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் நிறுவப் பட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் நினைவுச் சின்னத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் மரியாதைக்குரியதாக பராமரிப்பதைக் இறந்த வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையாக எண்ணுவதாக தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img