அண்ணல் அம்பேத்கர் 67வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவு சார்பில் மாநில தலைவர் பொன்னுத்தம்பி தலைமையில் சேலம் சுந்தர்லாட்ஜ் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் ஏழை எளியவருக்கு இலவசமாக வேட்டி – சேலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் அருணகிரி, மாவட்ட தலைவர் முருகன் மாநில அமைப்பு செயலாளர் சாந்தகுமார், சேட்டு
மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சித்ரா உட்பட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.