தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ 52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், 528 குடியிருப்புகள் கட்டும் பணி மற்றும் மின் தகனமேடை பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீரபுத்திரன், செயற்பொறியாளர் (வளர்ச்சி) பிரேம்குமார் உதவி செயற்பொறியாளர் அமலா.ஜாக்லின் வட்டார வளர்ச்சி அதிகாரி வசந்தா துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மகேஸ்வரி மற்றும் உதவி பொறியாளர் ரவி மற்றும் பிரான்சிகாபணி மேற்பார்வையாளர்கள் முத்துராமன் சுப்பிரமணியன் அப்பகுதி வார்டுஉறுப்பினர் பாரதி ராஜா, தங்கமாரி முத்து, திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் பாலன் மற்றும் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மாரியப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



