தஞ்சாவூர் சங்கீத மகாலில் மாமன்னர் சரபோஜி யின் மருத்துவ மகத்துவத்தின் அடிப்படையில் 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே (தஞ்சாவூர் அரண்மனை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்), மேக்சி விஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவ.விக்னேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தஞ்சாவூர் அரண்மனை அறக்கட்டளை மற்றும் மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தின. நிகழ்ச்சியில் கோபால கிருஷ்ணன், ஆடிட்டர் ரவிச்சந்திரன், ராம ராமநாதன் மற்றும் சங்கர், நிர்வாக அலுவலர், கணேசன், சங்கர், காசிராஜன் மேக்ஸ் விஷன் ஒருங்கிணைப்பாளர் கைலைஸ் லோகநாதன், மேலாளர் பாலமுருகன் மற்றும் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டனர்.



