தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
சென்னை சோழிங்க நல்லூர், மாதவரம் பால் பதனிடும் நிலையங்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன. அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள் ளது. ஆனால், பிறமாவட்டங்களில் இருந்து அதற்கு ஈடாகப் பால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விநியோகித்து வருகிறோம். தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது. பால் விநியோகத்தைச் சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளுக்கு சென்னை பெருநகர நிர்வா கத்துடன் இணைந்து பால் விநியோகம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சிர மங்களை பொருட்படுத்தாமல் மக்களுக்கு விநியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒத்துழைப்புத்தராத விற்பனையாளர்கள் மற்றும் லாரி ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக விலைக்கு பாலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



