கோவையில் பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
பள்ளி பருவ நாட்களில் மாணவர்கள் ஏதாவது தவறு செய்தாலோ மதிப்பெண்கள் குறை வாக எடுத்தாலோ தோப்புக் கரணம் போட சொல்லி ஆசிரியர்கள் தண்டிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது யோகாவின் ஒரு பகுதியாக மேலை நாடுகளில் தோப்புக் கரணம் ஒரு உடற்பயிற்சியாக மாறியுள்ளதோடு, தோப்புக் கரணம் போடுவதால் ஏற் படும் பயன்கள் குறித்து ஆராய்ச்சியே நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் தோப்புக்கரணம் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில், கோவையில் பள்ளி மாணவ,மாணவிகள் 100 பேர் இணைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, எல்.கே.ஜி. பயிலும் சிறு குழந்தைகள் முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 100 பேர் ஒவ்வொருவரும் தலா 108 தோப்புக்கரணம் என ஐந்து நிமிடத்தில் 10800 தோப்புக்கரணங்கள் போட்டு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.