fbpx
Homeபிற செய்திகள்வள்ளி கும்மி ஆட்டத்தை 20 நாளில் கற்று அரங்கேற்றம் நிகழ்த்திய பெண்கள்

வள்ளி கும்மி ஆட்டத்தை 20 நாளில் கற்று அரங்கேற்றம் நிகழ்த்திய பெண்கள்

கொங்கு மாவட்டங்களில் தற்போது புத்துயிர் பெற்று வரும் வள்ளி கும்மி கலையை கற்பதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மம்பாளையம், புங்கம் பாளையம், மங்களக்கரை புதூர் மற்றும் டி.ஜி புதூர் கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த கலையை முருகர் வள்ளி கும்மி கிராமிய கலை குழுவினரிடம் கடந்த 20நாட்களாக கற்று வந்தனர். அவர்களின் வள்ளி கும்மி அரங்கேற்றம் டி.ஜி புதூர் கிராமத்தில் நடைபெற்றது

இந்த அரங்கேற்றத்தில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் பங்கேற்று வள்ளி கும்மி கலையை அரங்கேற்றினர்

ஒரே சமயத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஒரே மாதிரியான மெட்டு போட்டு பாட்டுக்கு ஏற்ப நடனமாடி அசத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த அரங்கேற்றத்தினை காண இரண்டு கிராம மக்கள் அங்கு கூடி இந்த அரங்கேற்றத்தை திருவிழா போல கொண்டாடினர்.

படிக்க வேண்டும்

spot_img