fbpx
Homeபிற செய்திகள்ஊராட்சி அலுவலகம் - அங்கன்வாடியை திறந்து வைத்தார் கனிமொழி எம்.பி

ஊராட்சி அலுவலகம் – அங்கன்வாடியை திறந்து வைத்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள திம்மராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் களம்‘ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நேற்று (29ம் தேதி) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, திம்மராஜபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி கட்டடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். தொடர்ந்து, தொழில்கூடம் கட்டடத்திறகு அடிக்கல் நாட்டினார்.

மக்கள் களம் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img