fbpx
Homeபிற செய்திகள்அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி

அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி

தமிழக அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி தொடர் கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் 6 போட்டிகளில் நான்கு சர்வதேச மாஸ்டர் நார்ம்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் தலைவர் எம்.மாணிக்கம், பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி ஆகியோர், சர்வ தேச அளவிலான தொடர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இதில், ஐந்து வெளிநாட்டு வீரர்கள், ஐந்து இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்த செஸ் போட்டி தொடரில் கோவையை சேர்ந்த ஹர்ஷத், கிர் கிஷ்தானை சேர்ந்த அசில்பெக்அப்டிஜாபர், தெலுங்கானாவை சேர்ந்த ஆதிரெட்டி அர்ஜூன், சென்னை நந்திதா, சென்னை ஆர்னவ் மஹேஸ்வரி, பெலாரஸ் அலெக்ஸிடோரோவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

7வது போட்டி கோவை அலங்கார் கிராண்டேயிலும், அடுத்த மூன்று போட்டிகள் முறையே ஈரோடு, சேலம், சிவகாசியில் நடைபெறுகிறது. இப்போட்டிகள் டிசம்பர் 22ம் தேதியுடன் முடி வடைகிறது. சென்னை ஓபனில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருப்பதால் அதிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

11, 12 , 13வது போட்டிகள் ஜனவரி 9 முதல் 14 வரை சென்னையில் ஒரே நேரத் தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், காரைக்குடி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும்.

தமிழகத்தை சேர்ந்த 100 கிராண்ட் மாஸ்டர்களின் இலக்கை, முதலமைச்சர் முன்பே அறிவித்திருந்தார். அரசாங்கத்தின் இலக்கை அடைய இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.

தமிழக அரசு சரியான நேரத்தில் நிதியுதவி அளித்து, ஊக்கு வித்து, மாநிலத்தில் சதுரங்கத்தை மென்மேலும் வளர்க்க உதவிசெய்யுமாறு தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img