fbpx
Homeபிற செய்திகள்தடகள போட்டியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி சாம்பியன்

தடகள போட்டியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி சாம்பியன்

கோவை சகோதயா காம்ப்ளக்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே யான 44-வது தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில் 110 பள்ளிகள் சார்பில் 3,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தாண்டுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 102 புள்ளிகள் பெற்று மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் தட்டி சென்றனர்.

போட்டியின் முடிவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் எஸ்.மோகன்தாஸ் மற்றும் பள்ளியின் முதல்வர்கள் ஆசிரியர்கள் பாராட் டினர்.

படிக்க வேண்டும்

spot_img