Homeபிற செய்திகள்364 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

364 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தமிழக அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பள்ளி செயலர் முரளிகணேசன் தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் லட்சுமி பிரீத்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல் வரவேற்றார்.

பிளஸ் 1 படிக்கும் 364 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img