திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக் களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெய மணி, திமுக மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ். மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார்.
மாவட்ட மகளிர் அணி கவி தாதேவி, மண்டல தலைவர் கலைச்செல்வி, மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ் டோபர் விஜயராஜ். மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக் கப், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார்.
மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன் சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், கந்தசாமி, சரவணக்குமார், வைதேகி, ஜெயசீலி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, சூர்யா, வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திற னாளிகள் இல்லங்களில் உள்ளவர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.



