fbpx
Homeபிற செய்திகள்போட்டிகளில் கலந்து கொள்வதே, மாணவர்களுக்குப் பெரிய வெற்றி தான்

போட்டிகளில் கலந்து கொள்வதே, மாணவர்களுக்குப் பெரிய வெற்றி தான்

“போட்டிகளில் கலந்து கொள்வதே, மாணவர்களுக்குப் பெரிய வெற்றி தான்” என்று ஈரோட்டில் நடைபெற்ற திருக்குறள் விழாவில், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி ஈரோடு மாவட்டக் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் மணிமாறன் தெரிவித்தார்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், மாநிலம் முழுவதும் திருக்குறள் போட்டிகளை மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தி வருகிறது. அண்மையில் ஈரோடு மண்டலத்தில், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளி – கல்லூரிகளைச் சேர்ந்த 363 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றிய ஈரோடு மாவட்டக் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ப. மணிமாறன் பேசுகையில் “போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதேநேரம் தோல்வியுற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதே ஒரு வெற்றி தான்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. சா. சிவானந்தன், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. எஸ். வேலுமணி, வி. வி. சி. எம். செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கவிதா, ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஈரோடு முதுநிலை மண்டல மேலாளர் ஆ. கேசவன், ஈரோடு கிளை மேலாளர் சின்னதுரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில், மொத்தம் 130 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 73 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 46 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 11 மாணவர்களும் அடங்குவர். இப்போட்டியில் கீழ்க்காணும் மூன்று பேர், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர்.

· இடைநிலைப் பிரிவு: வ. கவின்த்ரா, லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம்

· மேல்நிலைப் பிரிவு: த. விஷ்ணுவர்தன், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு
· கல்லூரிப் பிரிவு: தே. தன்ராஜ், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 64 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 169 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img