fbpx
Homeபிற செய்திகள்2 புதிய வகுப்பறை கட்டிடங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

2 புதிய வகுப்பறை கட்டிடங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன் றியம், மீனாட்சிபுரம் ஊராட்சி, விட் லாபுரம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 -லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், துணை ஒன்றிய பெருந்தலைவர், ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி, பள்ளி தலைமை ஆசிரியை சுதா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஷ்வேல், வெள்ளைச்சாமி,
எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், குதிரை குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், வி.சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹி.விசங்கர், கிளைச் செயலாளர்கள் சக்கையா, முருகன், செல்லத்துரை, கிளை பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img