fbpx
Homeபிற செய்திகள்அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ கல்வியியல் படிப்புகள் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ கல்வியியல் படிப்புகள் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பெங்களூரு மற்றும் போபால் வளாகங்களில் டிப்ளமோ கல்வியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வியியல் டிப்ளமோ – இளம்பிராய கல்விக்கான படிப்பு, கல்வியியல் டிப்ளமோ – அனைவருக்குமான கல்வி படிப்பு, கல்வியியல் டிப்ளமோ – கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை.

இதில் சேர விரும்புவோர், பாடத்திட்ட விவரங்கள், சேர்வதற்கான தகுதி, கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்களை லீttஜீs://ணீக்ஷ்வீனீஜீக்ஷீமீனீழீவீuஸீவீஸ்மீக்ஷீsவீtஹ்.மீபீu.வீஸீ/பீவீஜீறீஷீனீணீs-வீஸீ-மீபீuநீணீtவீஷீஸீ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 8951978091 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பகுதி நேர ஓராண்டு படிப்பில், பாடத் திட்டத்தோடு நேர்முக பயிற்சியும் இணைந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வகுப்பறை, ஆன்லைன் முறையில் கற்பிக்கப்படுகிறது. இந்த டிப்ளமோ பாடத் திட்டமானது தொழில் முறை பயிற்றுநர்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள் ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

இப்படிப்புகளில் சேர வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பரில் நேர்காணல் நடை பெறும். வரும் 2024 பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img