fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் தேசிய நூலக வாரவிழா டாக்டர் செந்தில் எம்பி பங்கேற்றார்

தர்மபுரியில் தேசிய நூலக வாரவிழா டாக்டர் செந்தில் எம்பி பங்கேற்றார்

தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 56 வது தேசிய நூலக வாரவிழா மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் இரா.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தகடூர் புத்தகப் பேரவை செயலாளருமான மருத்துவர் இரா.செந்தில், நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நூல் கண்காட்சியை திறந்து வைத்தார்.

போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகத்தை நன்முறையில் பயன்படுத்தி உயரிய அரசுப் பணிகளில் இடம்பெறவேண்டும் எனவும் எம்.பி. கேட்டுக்கொண்டார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் இரண்டாம் நிலை நூலகர் ந.ஆ.சுப்ரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் மா.பழனி வாழ்த்துரை வழங்கினார்.

பட்டதாரி ஆசிரியர் ஜெ.முனிராஜ் மற்றும் க.சி.தமிழ்தாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர். விழாவின் நிறைவாக மூன்றாம் நிலை நூலகர் என்.பி.முத்துசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img