முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான “டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் லிமிடெட்”, கடும் ஒற்றைத் தலைவலியை நிர்வகிப்பதற்காக அணியக்கூடிய சாதனமான நெரிவியோ (Nerivio)-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய ஆரோக்கிய சவாலாக கடும் ஒற்றை தலைவலி உள்ளது. இது மாதத்துக்கு 15 நாள்கள் அல்லது அதற்கும் அதிகமாகவே பாதிக்கிறது. குறிப்பாக 30 சதவீதம் பெரியவர்களை பாதிக்கிறது. மக்கள் தொகையில் 1.7 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை ஒற்றை தலைவலி பாதிக்கிறது.
இந்தியாவில் கடும் ஒற்றைத் தலைவலி நோயாளிகளில் சுமார் 60 சதவீதம் பெண்களாக உள்ளனர். நெரிவியோ என்பது ரிமோட் எலக்ட்ரிக்கல் நியூரோமோடுலேஷனை (REN) பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் முதல் மற்றும் ஒரே சாதனமாகும்.
இதில் போதைப்பொருள் இல்லை. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தீவிரமான ஒற்றைத் தலைவலி தடுப்புக்கு உதவுகிறது.
இந்த சாதனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகவும், எளிதாக பயன்படுத்தும் வகையிலான அமைப்புகளை கொண்டதாகவும் உள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA) நெரிவியோ சாதனத்தை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது



