கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில் அமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்களுடனான சிக்கல்கள் மற்றும் தீர்வு குறித்த கருத்தரங்கு அரசு கூடுதல் தலைமை செயலாளர்/ தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தலைமையில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், மாவட்ட திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் வளர்மதி ஆகியோர் உள்ளனர்.



