ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது.மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பி.எம்.கௌரன், தமிழ்நாடு தமிழக ஆசிரியர் கழக மாநில இணைச் செயலாளர் இராசா.ஆனந்தன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கே.பாஸ்கரன், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சாமிநாதன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட நிர்வாகி, சி.காவேரி, பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முனிராஜ், விடுதி காப்பாளர் சங்க தலைவர் தினமணி, மீன்வளத்துறை சங்க தலைவர் முருகன், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்க தலைவர் ஸ்ரீநாத், பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகி மாணிக்கம், நில அளவை அலுவலர் ஒன்றிய நிர்வாகி ராமமூர்த்தி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி மூடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
“இடைநிலை ஆசிரியர்களுக் கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும். முதுகலை ஆசிரியர்களுக்கும். உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அர சுக்கு இணையான ஊதியம் வழங் கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலு வலர்கள்.
களப்பணியாளர்கள். பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.
கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியா ளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள்.
கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள். தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்ஆர்பி, செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள். பல்நோக்கு மருத்து வமனைப் பணியாளர்கள் ஆகி யோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் நவம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆசிரியர்- அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம் மாவட்டம் முழுவதும் நடத்துவது எனவும், நவம்பர் 25 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடந்துவது எனவும் இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று வெற்றிபெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.



