fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி 19வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சிபுரம் குறுக்கு 2 தெருவிற்கு புதிய கால்வாய் வசதியும்; சாலை வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 6 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு மகிழ்ச்சிபுரத்தில் புதிய கால்வாய் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் சின்னமணி நகரில் 11 லட்ச ரூபாய் செலவில் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் முன் னிலை வகித்தார். பின்பு அன்னை தெரசா நகர் ராஜகோபால் நகர் மற்றும் சின்னமணி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்.

மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கி யநாதன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரி ஜான் சீனிவாசன் பொன்னப்பன்சந்திர போஸ் மாநகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், திமுக வட்டச்செயலாளர் பத்மாவதி சந்திரமோகன், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, தர்மர், வட்டச் செயலாளர் என் பொன்னுசாமி மாநகர வர்த்தக அணி எஸ் ஆனந்த சேகர்வைகுண்ட பதிபெருமாள் கோவில் அறங்காவலர் செந்தில்குமார் வட்ட பிரதிநிதி ஆர் வேல்முருகன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img