குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்” இரண்டாம் கட்டத்தை நேற்று சென்னை கலை வாணர் அரங்கில் ந¬ டபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி – அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி பரி வர்த்தனை அட்டைகளை வழங்கினார்.
நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செய லாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண் முகையா, விளாத்திகுளம் சட் டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட் சுமிபதி, தூத்துக்குடி மாந கராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்



