கோவை மண்டல யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் லஞ்சத்துக்கு எதிரான விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் – 2023 கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் அருகில் இருந்து அண்ணாசிலை வரை நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை வங்கியின் தலைமை அலுவலக உதவிப் பொது மேலாளர் சஞ்சய் குமார் சிங் துவக்கி வைத்தார்.
துணை பிராந்தியத் தலைவர்கள் ஜி.ரவீந்திரன், மகாதேவ்.என், முதன்மை மேலாளர் (விஜிலன்ஸ்) சூரஜ்.பி மற்றும் வங்கிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



