கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார், மாநகரப் பொறியாளர் (பொ) முருகேசன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் குணசேகரன், உதவி பொறியளார் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



