பாரத ஸ்டேட் வங்கி கோவை மண்டல அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் பிரவேஷ் குமார் சுபுதி, துணை பொது மேலாளர் திலிப் சிங் யாதவ், துணை பொது மேலாளர் (விவசாயம்) ஜெகதீஸ்வர காரி, உதவி பொது மேலாளர் (கோவை கிளை), சுதாகரன் மற்றும் நபார்டு வங்கியின் கோவை மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலா ராவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் விவசாய கடன் திட்டங் கள் மற்றும் பல்வேறு அரசு சார்ந்த கடன் திட்டங்கள் பற்றியும், வேளாண் உற்பத்தி நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான கடன் திட்டங்கள் பற்றியும், அரசாங்க ஆயுள் காப்பீட்டு திட் டங்கள் பற்றியும் மற்றும் சேமிப்பு திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத் துரைக்கப்பட்டது.
மேலும் 7 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் அனுமதி கடிதங்களை வங்கியின் பொது மேலாளர் பிரவேஷ் குமார் சுபுதி வழங்கினார்.
நிகழ்வில் பங்கு கொண்ட வேளாண் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயல் அதிகாரிகள் கூறுகையில், வங்கியின் திட்டங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
அரசு சார்ந்த திட்டங்களை மிக விரிவாகவும், தெளிவான முறையில் எடுத்துரைத்தது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது எனத் தெரிவித்தனர்.



